வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (19:29 IST)

2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக பைஜுஸ் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு பாடத்திட்ட பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படாத சூழலில் மாணவர்கள் முழுவதுமாக படிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்படிருந்தாலும் வீட்டிலுள்ள மாணவர்கள் அடுத்த வகுப்பு செல்லும் முன் நடப்பு பாடத்திட்டங்களை முழுமையாக கற்று தேற வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த நேரத்தில் பைஜூஸ் போன்ற ஆன்லைன் டியூஷன் ஆப்கள் அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டன. சினிமாக்காரர்களும், கிரிக்கெட் வீரர்களும் இந்த நிறுவனத்துக்கு தூதுவர்களாக மாறினர். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராகவும் இந்நிறுவனம் இருக்கிறது.

ஆனால் இந்த நிறுவனம் எதிர்பார்த்தது போல வருவாய் ஈட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்னமும் லாபம் பார்க்க முடியாமல் நஷ்டத்தில்தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் 2500 பேரை வேலைநீக்கம் செய்யப் போவதாக பைஜூஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.