திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (11:08 IST)

இணையம் முழுவதும் ஹார்ட் அட்டாக் ட்ரெண்டிங்! அதிர்ச்சியில் இந்தியா! – காரணம் என்ன?

Silent heart attack
தற்போது திடீர் மாரடைப்பு தொடர்பாக இந்தியா முழுவதும் ஹார்ட் அட்டாக் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல காலமாகவே மாரடைப்பு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. முன்னதாக 40 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு வரும் சம்பவங்கள் சராசரியாக இருந்து வந்த நிலையில் தற்போது 25 வயது இளைஞர்கள் கூட மாரடைப்பால் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் திருமண வரவேற்பு ஒன்றில் நடனமாடி சென்ற இளம்பெண் மாரடைப்பால் மயங்கி விழுந்து உடனே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீப காலமாக இளைஞர்கள் திடீர் மாரடைப்பால் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் #heartattack என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. இந்த ஹேஷ்டேகில் இடம் பெற்றுள்ள ஹார்ட் அட்டாக் மரணங்கள் தொடர்பான வீடியோக்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. அதேசமயம் இதுபோன்ற திடீர் மாரடைப்பு சம்பவங்களை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள், விழிப்புணரவையும் மருத்துவர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் இப்படியான திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edit By Prasanth.K