1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:19 IST)

அடுத்த தோனி உருவாகி வருகிறார்… இந்திய அணியின் இளம் வீரர் குறித்து கவாஸ்கர் கருத்து!

இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடும் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே சேர்த்து சொதப்பியுள்ளது.

இந்த போட்டியின் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறிய போது விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் சேர்த்தார். அவரது இன்னிங்ஸால்தான் இந்திய அணி 307 ரன்கள் சேர்த்தது.

அவரின் இந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “துருவ்வின் இந்த நிதானமான இன்னிங்ஸை பார்க்கும்போது அவரை அடுத்த எம் எஸ் தோனியாகவே நான் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.