1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (15:28 IST)

8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இங்கிலாந்து.. எளிதில் வெற்றி பெறுமா இந்தியா?

india vs england
இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடும் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க முடியாமல் தத்தளித்து வருகிறது
 
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்திருந்தது
 
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி சற்றுமுன் வரை 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது 
இதனை அடுத்து தற்போது 186 ரன்கள் மட்டுமே முன்னிலையில் இங்கிலாந்து அணி உள்ளதால் இந்திய அணி மிக எளிதில் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்திய அணியின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 3  விக்கெட்டுக்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 
 
 
Edited by Siva