1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (08:53 IST)

சஞ்சு சாம்சனின் வாழ்க்கையே மாறப்போகுது… சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில்  முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சனின் அபார சதம் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பவுலிங்கால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல், கிடைக்கும் போது சொதப்பியும் வந்த சஞ்சு சாம்சன் இப்போது தனது முதல் சர்வதேச சதத்தை அடித்து பிசிசிஐக்கு தன்னுடைய இருப்பை அறிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “இந்த சதம் சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையையே மாற்றப் போகிறது” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “இந்த சதத்தால் இரண்டு விஷயங்கள் நடக்கும். முதலில் சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இரண்டாவது சஞ்சு சாம்சனே தன்னை இன்னும் அதிகமாக நம்பத் தொடங்குவார்.  அவர் இந்திய அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர். ஆனால் ஏதோ சில காரணங்களால் அது தடைபட்டு வந்தது. ” எனக் கூறியுள்ளார்.