கம்மின்ஸ், ஸ்டார்க்குக்கு இவ்வளவு தொகையா? ஏலத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டது இந்த அணிகள்தான்.. டிவில்லியர்ஸ் கருத்து!
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான மினி ஏலம் நேற்று துபாயில் நடந்து முடிந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
அதே போல பேட் கம்மின்ஸை ஐதராபாத் அணி 20.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இவர்கள் இருவருக்கும் இவ்வளவு பெரிய தொகை தேவையா என்று அணிகள் யோசித்து இருக்க வேண்டும் முன்னாள் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள அவர் “அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள்தான். ஆனால் அவர்களுக்கு அவ்வளவு தொகை செலவு செய்திருக்க வேண்டுமா என அணிகள் யோசித்திருக்க வேண்டும். இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள்தான் புத்திசாலித் தனமாக செயல்பட்டன. குறைந்த விலையில் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்” எனக் கூறியுள்ளார்.