ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2023 (08:45 IST)

சீனியர் வீரர்கள் பென்ச்மார்க் செட் செய்துள்ளார்கள்.. அதை நாங்கள் பின்தொடர்கிறோம்- ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில்  முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சனின் அபார சதம் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பவுலிங்கால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

114 பந்துகள் சந்தித்து மூன்று சிக்சர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசிய சஞ்சு சாம்சன் 108 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அவர் தனது சதம் அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி எனப் பேசியுள்ளார்.

மேலும் அவர் “கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. டாப் ஆர்டரில் பேட் செய்யும் போது கூடுதலாக 10 முதல் 20 பந்துகளை எடுத்துக் கொள்ள முடியும்.  திலக் வர்மாவின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் பெருமையடைவார்கள். இந்தியா அணியின் தரம் என்ன என்பதை மூத்தவீரர்கள் பென்ச்மார்க் செட் செய்து வைத்துள்ளார்கள். அதை பின்தொடர்ந்து ஜூனியர் வீரர்கள் பயணிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.