1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sunil gavaskar talked about kohli and rohith jersey will be retired in future

சச்சின், தோனிக்கு நடந்ததைப் போல இவர்களுக்கும் நடக்கும் என நம்புகிறேன் –சுனில் கவாஸ்கர் கருத்து!

தோனி
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி குறுகிய காலத்தில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஆனார். 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் ஆகிய கோப்பைகளை அவர் தலைமையில் இந்திய அணி வென்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவரின் ஜெர்ஸி எண்ணான 7 ஆம் நம்பர் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் ஷுப்மன் கில் இந்த ஏழாம் நம்பர் எண்ணைக் கேட்டதாகவும், அதை பிசிசிஐ மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. வேறு எந்த வீரரும் அந்த ஜெர்ஸி எண்ணைக் கேட்க கூடாது என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்னர் சச்சினின் ஜெர்ஸி எண்ணான 10 ஆம் நம்பரையும் ஓய்வு பெற்றதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் இதுபோல எதிர்காலத்தில் ரோஹித்தின் 45 ஆம் எண் ஜெர்ஸி மற்றும் கோலியின் 18 ஆம் எண் ஜெர்ஸி ஆகியவற்றுக்கும் பிசிசிஐ ஓய்வளிக்கும் என நம்புகிறேன் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
3வது ஒருநாள் போட்டி.. ருத்ராஜூக்கு பதிலாக களமிறங்கிய வீரர்.. ஸ்கோர் விவரம்..!