1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India won the third odi and series also

சஞ்சு சாம்சன் சதத்தால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!

இந்தியா
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில்  முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்தது. போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி  டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்தது. ருத்ராஜுக்கு பதில் ரஜத் படிதார் களமிறங்கிய நிலையில் அவர் 22 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

இந்தியா சார்பில் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் சதமடித்த முதல் கேரள வீரர் என்ற சாதனையை சாம்சன் படைத்துள்ளார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழந்து 296 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 46 ஓவர்களில் அனைத்து  விக்கெட்களையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பில் அர்ஸ்தீப் சிங் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. சதமடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகவும், அர்ஸ்தீப் சிங் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
About Writer
vinoth