1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (07:40 IST)

தோனி- ஜுரெல் ஒப்பீடு… விமர்சனங்களை அடுத்து பல்டி அடித்த கவாஸ்கர்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில். சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் இல்லாத நேரத்தில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக அவர் கிடைத்துள்ளார் என அவர்குறித்து பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.

அவரின் இந்த இன்னிங்ஸ் குறித்து ஒரு உரையாடலின் போது பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “துருவ்வின் இந்த நிதானமான இன்னிங்ஸை பார்க்கும்போது அவரை அடுத்த எம் எஸ் தோனியாகவே நான் பார்க்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து விமர்சனங்கள் வரத் தொடங்கின. 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒருவரை தோனியோடு ஒப்பிடுவதா என ரசிகர்களும் கண்டித்திருந்தனர். கங்குலி கூட கவாஸ்கரின் ஒப்பீடு தவறானது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தான் சொன்ன கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் கவாஸ்கர்.

அதில் “மைதானத்தைக் கணிக்கும் விதம் மற்றும் பேட் செய்யும் விதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது தோனிக்கும் ஜுரெலுக்கும் ஒற்றுமை இருப்பதாக தோன்றியது.  பேட் செய்யும் தோனி ஒரு சிக்ஸ் அடித்துவிட்டு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய சிங்கிள் எடுப்பார். அதுபோல ஜுரெலும் விளையாடினார். கீப்பிங்கிலும் இளவயது தோனியின் துடிப்பை நினைவூட்டினார். அதனால் நான் ஜுரெலை தோனியை போன்றவர் என்றேன். ஆனால் அவரால் தோனி ஆகமுடியாது. நம்மிடம் இருப்பது ஒரே தோனிதான்” எனக் கூறியுள்ளார்.