புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (17:59 IST)

கோலி இல்லாதது வருத்தம் அளிக்கிறது… ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்!

ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி இல்லாதது வருத்தம் அளிக்கிறது என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் இப்போது சில மாற்றங்கள் செய்துள்ளது பிசிசிஐ. அதன் படி ஜனவரி மாதம் நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியின் பிரசவத்துக்காக அவர் விலகியுள்ளார்.

இந்நிலையில் கடைசி மூன்று டெஸ்ட்களில் கோலி இல்லாதது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ’மூன்று டெஸ்ட்களில் கோலி இல்லாதது அதிர்ச்சிதான். ஆனாலும் இந்திய அணி அபாயகரமான அணிதான்.’ எனக் கூறியுள்ளார்.