செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:50 IST)

கோலியும் இல்லை… ரோஹித்தும் இல்லை – கனவு அணியை வெளியிட்ட டாம் மூடி!

டாம் மூடி வெளியிட்டுள்ள ஐபிஎல் கனவு அணியில் கோலி மற்றும் ரோஹித் இருவரும் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடர் முடியும் தருவாயில் உள்ள நிலையில் முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்கள் கனவு அணியை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி வெளியிட்டுள்ள ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இடம் பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக கோலியும்,  அதிக கோப்பைகளை வென்ற வீரராக ரோஹித் ஷர்மாவும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டாம் மூடி வெளியிட்டுள்ள கனவு அணி

தவான்,. கேஎல் ராகுல், . சூர்யகுமார் யாதவ்,. ஏபி டிவில்லியர்ஸ், இஷான் கிஷன்,  ராகுல் டெவாட்டியா,  ரஷித் கான்,  ஜாஃப்ரா ஆர்சர்,  ரபடா,  சாஹல், . பும்ரா.