1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:23 IST)

இரண்டாவது ஆஸி முன்னிலை… மீண்டும் கேப்டன் பொறுப்பேற்ற ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

அதையடுத்து இப்போது அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸி அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 330 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் லபுஷான் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

இந்த போட்டியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடாத நிலையில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பால் டேம்பரிங் விவகாரத்தில் அவர் தன்னுடைய கேப்டன் பதவியை இழந்த நிலையில் இப்போது மீண்டும் முதல் முறையாக கேப்டன் பொறுப்புக்கு மீண்டும் வந்துள்ளார்.