வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:07 IST)

அடுத்தடுத்த நாட்களில் ரஜினியின் இரண்டு படங்கள் ரிலீஸ்… களத்தில் இறங்கிய சிவாஜி!

ரஜினிகாந்தின் பாபா படம் ஏற்கனவே ரி ரிலீஸ் செய்யபப்டும் நிலையில் இப்போது சிவாஜி படமும்  ரி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது டிசம்பர் 10-ஆம் தேதி ‘பாபா’ படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையொட்டி பாபா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. ஆனால் டிரைலர் பார்த்த ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியே வெளிப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பே பாபா படத்தில் சில பில்டப் காட்சிகள் ரசிகர்களைக் கவரவில்லை. ஆனால் அந்த காட்சிகளைக் கூட இப்போதைய காலத்தில் டிரைலரில் வைக்க, அது சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆகி வருகிறது.

நாளை பாபா திரைப்படம் 100க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இன்று முதல் 7 நாட்களுக்கு சிவாஜி திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக பிவிர் மற்றும் சினிபாலிஸ் ஆகிய இரு திரைகளில் மட்டும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.