1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Water opened from chembarapakkam lake today

செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

chembarapakkam
செம்பரபாக்கம் ஏரி மற்றும் பூண்டி அணையில் இருந்து உபரி நீர் இன்று திறக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் காரணமாக செம்பரபாக்கம் ஏரி மற்றும் பூண்டி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
 
இந்த நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 100  கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதேபோல் பூண்டி அணையிலிருந்து இன்று நண்பகல் 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட இருப்பதாகவும் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
23 நாட்களில் 13 லட்சம் பேர் ஐயப்ப தரிசனம்: சபரிமலை அப்டேட்!