புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (18:17 IST)

ஸ்டீவ் ஸ்மித் பிறந்தநாள்.....ரசிகர்கள் வாழ்த்துமழை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஸ்டீவன் பீட்டர் ஸ்மித் இன்று தனது 32 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.  வலது கை பேட்ஸ்மேன் ஆன அவர் எதிரணியினரின் பந்துவீச்சை  துரத்தியடித்து ரன் குவிப்பதில் வல்லவர். இவர் பல முறை ஐசிசி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பந்தை சேதப்படுத்தியதாக விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால் ஓரண்டு தண்டிக்கப்பட்டார்.

2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள ஸ்டீவ் ஸ்மித் அணியை வெற்றிக்கோப்பை வெல்ல உறுதியாக துணையிருப்பார் எனக் கூறப்படுகிறது. இரண்டாம் கொரொனா பரவலால் ஆஸ்திரேலியா வீரர்கள் தாய் நாடு  திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டீவ் பிறந்தநாளையொட்டி அவருக்கு  ரசிகர்களின்  வாழ்த்து குவிந்து வருகிறது.