ஊரடங்கில் தளவுகள்...தமிழக மக்கள் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டாவது நாளாக தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.
தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றது.
சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலங்கள் அரசுடன் இணைந்து மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது முழு ஊடங்கு உள்ளதால் கொரொனா தாக்கம் குறைந்துள்ளது.
தற்போது கொரொனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், சில நாட்களாக கொரொனா பாதிப்பு தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 27 ஆயிரமாக உள்ளதால், கொரொனா தொற்றுத் தீவிரமாக உள்ள பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளுக்கு அத்தியாவசியக் கடைகள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும் எனவும், அதேபோல் கொரொனா பரவல் அதிமுள்ள மாவட்டங்களில் கடுமையான் விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜூன் 7க்குப் பிறகு தமிழக அரசு பிறப்பிக்கவுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் இடம்பெறும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.