திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (16:16 IST)

பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் இலங்கை! – இமாலய இலக்கை நோக்கி..!

SL PAK
இன்றைய உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் இலங்கை அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.



ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நேர போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதி வருகின்றன. ஏற்கனவே ஒரு போட்டியில் பெற்ற வெற்றி மூலம் தகுதிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் தகுதிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தற்போது வரை 25 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இலங்கை அணி 200 ரன்களை நெருங்கி உள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேனான நிசங்கா ஒரு அரை சதத்தை வீழ்த்தி அவுட் ஆனார். ஆனால் குசால் மெண்டிஸ் நீடித்து நின்று சதத்தை கடந்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கையின் ஸ்கோர் இமாலய இலக்கை அடைய பெரும் வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் அணி தக்க சமயத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தா விட்டால் வெற்றி பெற பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K