வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (14:52 IST)

WorldCup2023: இங்கிலாந்து அணி பங்களதேஷுக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு!

England vs Bangladesh
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து இங்கிலாந்து விளையாடுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களதேஷ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில்  பெர்ஸ்டோ 52 ரன்னும், மாலன் 140 ரன்னும், ரூட் 82 ரன்னும் அடித்தனர். எனவே 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்து, பங்களதேஷுக்கு 367 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

பங்களதேஷ் அணி சார்பில், இஸ்லாம் 3 விக்கெட்டும், ஹசன்  4 விக்கெட்டும், கைப்பற்றினர். அஹமத் மமற் மற்றும் மெய்தி சயீக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.