திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (22:36 IST)

விக்ரம் வேதா நடிகருக்கு கல்யாணம்!

‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கதிருக்கு, வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருக்கிறது.
 
‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கதிர். தொடர்ந்து ‘கிருமி’, ‘என்னோடு விளையாடு’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘சத்ரு’, ‘பரியேறும் பெருமாள்’, ‘சிகை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 
கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழில் அதிபரான வாசுதேவன் – ஜெயந்தி தம்பதிகளின் மகளான சஞ்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வருகிற 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈரோடு வேலாயுதசாமி கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.
 
முதல்நாள், பெருந்துறை மேட்டுக்கடையில் உள்ள ஸ்ரீதங்கம் மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தனியாக நடைபெற உள்ளது.