வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (09:17 IST)

“மைதானம் இப்படி இருக்கும் என்று நினைக்கவில்லை…” தோல்விக்குப் பின்னர் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கருத்து!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. எனவே முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின், மர்க்ராம் 25 ரன் களும், பார்ன்வெல் 24 ரன்களும், மகாராஜ் 41 ரன் களும் அடித்தனர். 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடியில் 108 ரன் கள் எடுத்து இந்தியாவுக்கு 109 ரன்கள் வெற்றி இலக்கு  நிர்ணயித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ராகுல் 51  ரன்களும், கோலி 3 ரன்களும், யாதவ் 50  ரன்களும் அடுத்தனர். எனவே  இந்திய அணி 16.4  ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு110  ரன்கள் அடுத்து வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பின்னர் பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா “மைதானம் இவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் எங்கள் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயலப்ட்டது மட்டுமே ஆறுதல். எங்கள் பவுலர்களை இலக்கைக் காக்க தேவைப்படும் ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை” எனக் கூறியுள்ளார்.