1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (18:02 IST)

கேரள வன்முறை: PFI அமைப்பிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் அரசு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சமீபத்தில் நடத்திய பந்த் காரணமாக ஏற்பட்ட வன்முறையால் பல பொருட்கள் சேதம் அடைந்ததை அடுத்து 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுவது உட்பட பல புகார்கள் எழுந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை  மற்றும் அமலாக்கத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது
 
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 23ஆம் தேதி கேரள மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தின்போது பேருந்துகள் கார்கள் ஆட்டோக்கள் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கப்பட்டது 
 
75 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இழப்பீடாக 5.06 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து உள்ளது.