செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2024 (14:46 IST)

கோலிக்குப் பிறகு ரிஷப் பண்ட்தான்… அவர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. கங்குலி புகழாரம்!

கோலி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகக் கிரிக்கெட்டின் முகமாக இருக்கிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமையவில்லை. தன்னுடைய மோசமான ஃபார்மில் இருந்து திரும்பி கோலி கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார்.

விரைவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்களோ கோலியின் முகத்தைதான் முன்னிலைப் படுத்தி வருகின்றனர். அந்நாட்டு ஊடகங்கள் அனைத்தும் கோலியின் புகைப்படத்தைப் போட்டு அவர் குறித்து கட்டுரை எழுதி வருகின்றன. அதேபோல தொலைக்காட்சியிலும் ஆஸியின் சார்பாக பாட் கம்மின்ஸ் முகமும், இந்தியா சார்பாக கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முகத்துக்குப் பதிலாக கோலியின் முகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி “இந்திய அணியில் கோலிக்குப் பிறகு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பண்ட்தான். டெஸ்ட் போட்டிகள் என்று வந்துவிட்டால் அவர் எப்போதும் ஸ்பெஷலான வீரராகிவிடுவார். அவர் செய்யவேண்டியது என்னவென்றால் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் இதுபோல சிறப்பாக விளையாடுவதுதான். அத்தகைய திறமையைக் கொண்டவர்தான் அவர்” எனக் கூறியுள்ளார்.