செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (10:06 IST)

ஏ.. எப்புட்றா..! இத்தனை வருட ஐபிஎல்லில் இல்லாத சாதனை! – சிக்கந்தர் ரசாவுக்கு கூடிய மவுசு!

Sikhandar Raza
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியுடன் மோதிய பஞ்சாப் அணி வெற்றி பெற்ற நிலையில் பஞ்சாப் அணி வீரர் சிக்கந்தர் ரசா புதிய சாதனையை படைத்துள்ளார்.

16வது ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் அணி 19 ஓவர்களிலேயே 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி வீரர் சிக்கந்தர் ரஸாவின் பங்களிப்பு பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. குஜராத் அணி விளையாடியபோது ஓப்பனிங் பேட்ஸ்மேனான தீபக் ஹூடாவை எல்பிடபிள்யூ செய்த ரஸா, பேட்டிங்கின்போதும் வெளுத்து வாங்கினார். 41 பந்துகளில் 57 ரன்களை குவித்தார் ரஸா.

இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் ஒரே போட்டியில் அரைசதம், விக்கெட் மற்றும் ஆட்டநாயகன் விருது என மூன்றையும் பெற்ற ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சிக்கந்தர் ரஸா.

Edited by Prasanth.K