1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (07:39 IST)

இந்த வெற்றி முக்கியமான ஒன்று… பவுலர்களிடம் நான் இதைதான் ஆலோசித்தேன் – கேப்டன் கில் கருத்து!

இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜிம்பாப்வேவில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 182 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு ஆடிய ஜிம்பாப்வே அணி 159 ரன்கள் மட்டும் சேர்த்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் கில் “இந்த வெற்றி எங்களுக்கு முக்கியமான வெற்றி. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இந்த ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆவதில் நிலையற்ற தன்மை இருந்தது. லென்த் பால்களை அடிப்பதில் சிரமம் இருந்தது. புதிய பந்துதான் பேட் செய்ய கடினமாக இருந்தது. பந்து பழையதாகும் போது எளிதாக இருந்தது. இதைதான் நான் பவுலர்களிடம் சொன்னேன்.  எங்கள் அணியில் அனைவருமே வெற்றிக்குப் பங்காற்றினர்” எனக் கூறியுள்ளார்.