புதன், 18 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2024 (19:59 IST)

அதிரடி பதிலடி! 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா!

India vs Zimbabwe 2nd T20
இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.



இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜிம்பாப்வேவில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. சேஸிங்கில் இறங்கிய ஜிம்பாப்வேவை பவுலிங்கில் கட்டுப்படுத்திய இந்திய அணி 18.4 ஓவர்களில் 134 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் அபிஷேக் சர்மா சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார். ருதுராஜ் கெய்க்வாட் (77), ரின்கு சிங் (48) சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். பவுலிங்கில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Edit by Prasanth.K