1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shubman gill can not fulfill sanju Samson place

சஞ்சு சாம்சன் இடத்தில் கில் இறங்கக் கூடாது… ரவி சாஸ்திரி சொல்லும் காரணம்!

ஆசியக் கோப்பை
17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் துபாயில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பல விமர்சனங்கள் சர்ச்சைகள் எழுந்தன. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறாதது கண்டனங்களைப் பெற்றது. ஆனாலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி பலமிக்க அணியாகதான் உள்ளது. இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளதால் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் இருந்து கீழிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கடந்த ஒரு ஆண்டாக சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக டி 20 போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அதனால் சஞ்சு சாம்சன் இடத்தில் கில் இறங்கக் கூடாது என ரவி சாஸ்திரி  கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசும்போது “சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக பல ரெக்கார்ட்களைப் படைத்துள்ளார். அதனால் அந்த இடத்தை அவருக்கு விட்டுவிடுவதே நல்லது. சஞ்சுவின் இடத்தை ஷுப்மன் கில்லால நிரப்ப முடியாது. வேறு ஏதாவது ஒரு இடத்தில் வேண்டுமானால் கில் இறங்கலாம்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கைகுலுக்கிக் கொள்ளாத இந்தியா பாகிஸ்தான் கேப்டன்கள்!