செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (09:33 IST)

இன்று இரண்டாவது டி 20 போட்டி… இந்திய அணியில் நடக்கும் மாற்றம்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி இன்று நடக்க உள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்னும் அங்கு ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் வெற்றிகரமாக விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா, தற்போது டி 20 தொடரையும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.

முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்ட தீபக் ஹூடா இந்த போட்டியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.