1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (10:13 IST)

சதமடிக்கும் வாய்ப்பை இழந்த ஸ்ரேயாஸ் ஐயர்! –இரண்டாம் நாளில் முதல் விக்கெட்!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கில் களமிறங்கினார்கள். ஆனால் அடுத்தடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் 2 விக்கெட்டுகள் மளமளவென விழுந்து விட்டதை அடுத்து விராட் கோலி ஒரே ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அதன் பின்னர் புஜாராவும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காத் ஸ்ரயாஸ் ஐயர் 82 ரன்களோடு களத்தில் இருந்தார். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 278 ரன்களை சேர்த்திருந்தது. 

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலைய்லில் மேற்கொண்டு 4 ரன்களை மட்டுமே சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார்.