1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (21:28 IST)

இந்தியாவில் 50 நகரங்களில் 5G சேவை: அமைச்சர் தகவல்!

5G
இந்தியாவில் 50 நகரங்களில் 5G சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் 5G சேவை தொடங்கப்பட்டது என்பதும் ஏர்டெல் வோடபோன் ஜியோ ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இந்தியாவில் எத்தனை நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது என கேட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தகவல் தெரிவித்துள்ளார்
 
டெல்லி மும்பை சென்னை பெங்களூரு உள்பட 50 நகரங்களில் 5G சேவைகள் தொடங்கப் பட்டுள்ளது என்றும் நாட்டிலுள்ள 2.6 லட்சம் கிராமங்களில் 1.84 லட்சம் கிராமங்களுக்கு   இணைய சேவைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva