1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shoaib malik suspected of match fixing

சர்ச்சைக்குரிய வகையில் பந்துவீச்சு… சோயிப் மாலிக்கின் காண்ட்ராக்ட் ரத்து!

சோயிப் மாலிக்
இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர்.

இதையடுத்து இருவருமே தற்போது தங்கள் துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதையடுத்து சானியாவை விவாகரத்து செய்த மாலிக், சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த நிலையில் அவர் இப்போது பங்களாதேஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடி வருகிறார்.

இதில் ஒரு போட்டியில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் மூன்று நோ பால்களை வீசினார். இதையடுத்து அவர் மேட்ச் பிக்ஸிங் செய்திருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவரின் BPL ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்
எனக்கு சொல்லிக் கொடுத்ததை அவருக்கும் சொல்லிக் கொடுங்கள்… ராகுல் டிராவிட்டுக்கு பீட்டர்சன் கோரிக்கை!