புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (08:15 IST)

ஷோயப் மாலிக் மறுமணம்… மௌனம் கலைத்து பேசிய சானியா மிர்சா!

இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர்.

இதையடுத்து இருவருமே தற்போது தங்கள் துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இந்நிலையில் இப்போது சானியா மிர்சா ஷோயப் மாலிக் தம்பதிகள் பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தி படுவது மாலிக் சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது இந்த விவகாரம் குறித்து சானியா மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பு கருத்து தெரிவித்துள்ளது. அதில் “தன் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளிக்கு வராதபடி சானியா இதுவரை காத்து வந்துள்ளார். ஆனால் இப்போது ஷோயப் மாலிக் உடனான அவரது திருமண உறவு சட்டப்படி முடிவுக்கு வந்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டியுள்ளது. மாலிக்கின் புதிய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென அவர் விரும்புகிறார்.

இந்த நேரத்தில் சானியாவின் ரசிகர்களும், அவர் நலம் விரும்பிகளும் அவரின் தனிமைக்கு மதிப்பளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.