திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (17:24 IST)

என் ஓடும் நாட்கள் முடிந்துவிட்டன… ஷோயிப் அக்தர் அதிர்ச்சி டிவீட்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் மூட்டு மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளார்.

பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி இதுவரை அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய காலம் முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமலேயே விளையாடினார். கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இப்போது வர்ணனையாளராகவும் விமர்சகராகவும் செயல்பட்டு வரும் அவர் விரைவில் மூட்டு மாற்ற சிகிச்சையை ஆஸ்திரேலியாவில் செய்துகொள்ள உள்ளார். இது சம்மந்தமாக தன்னுடைய டிவிட்டரில் ‘என் ஓடும் நாட்கள் முடிந்துவிட்டன்’ எனக் கூறியுள்ளார்.