100வது போட்டியில் சதம் விளாசி அசத்திய தவான்

Dhawan
Last Updated: சனி, 10 பிப்ரவரி 2018 (19:08 IST)
100வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் சதம் விளாசி அசத்தினார்.

 
தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையே இன்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தனது 100வது ஒருநாள் போட்டியில் இன்று விளையாடி வருகிறார். 
 
இதுவரை 12 சதங்கள் மற்றும் 25 அரை சதங்கள் அடித்துள்ள தவான் இன்று தனது 100வது ஒருநாள் போட்டியில் 13வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :