வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (19:43 IST)

வந்த வேகத்தில் வெளியேறிய இந்திய வீரர்கள்

மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்துள்ளது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்து தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பரிக்க அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்துள்ளது.
 
தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ரன் எதுவும் எடுக்காமல் ஆரம்பத்திலே வெளியேறினார். இதையடுத்து கேப்டன் கோலி தவானுடன் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
 
அரைசதம் அடித்த தவான் 76 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டானர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரகானே 11 ரன்களில் வெளியேறினார். ரகானே, கோலி ஜோடி இணைந்து இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரகானே வந்த வேகத்தில் வெளியேறினார். 
 
இதையடுத்து களமிறங்கிய பாண்டியாவும் 15 ரன்களில் வெளியேறினார். கோலி மட்டும் ஒருபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது தோனி களமிறங்கியுள்ளார். 
 
தென் ஆப்பரிக்க பவுலர்கள் இந்திய அணியை 300 ரன்கள் குவிக்காமல் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்த போட்டியில் தென் ஆப்பரிக்க வெற்றி பெற முடியும்.