1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shikar dhawan summoned by ED for branding online Gambling

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Shikar Dhawan with his son
இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஷிகார் தவான். கடந்த 2013 ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டடியில் அறிமுகமானார். அதன் பிறகு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இதுவரை 167 ஒரு நாள் போட்டிகளிலும், 6793 ரன்களும்,34 டெஸ்ட் போட்டிகளில் 2315 ரன்களும், 217 ஐபிஎல் போட்டிகளில் விளையாட்டு 6616 ரன்களும் அடித்துள்ளார்.

இவர் 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து  கொண்டார். ஆயிஷா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்துப் பெற்றவர். மேலும் தவானை விட வயதில் மூத்தவர். இவர்களின் திருமண வாழ்க்கை 9 ஆண்டுகள் நீடித்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது தவானுக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஷிகார் கடந்த காலத்தில் 1XBet என்ற சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்ததற்காக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
About Writer
vinoth