1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 ஜூலை 2018 (08:54 IST)

பந்தை ஏன் வாங்கினார் தோனி? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிசாஸ்திரி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் தோனி, அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கியதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் எழுந்தது. 
 
இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெறும்போது அவர் ஆடிய கடைசி போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஸ்டெம்புகளை தோனி கேட்டு வாங்கினார். அதன் பின் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அதேபோல் பந்தை வாங்கிய பின்னர் ஒருநாள் போட்டிக்கான ஓய்வு முடிவை அவர் அறிவிப்பார் என்று வதந்திகள் எழுந்தன.
 
இந்த நிலையில் தோனி பந்தை அம்பயரிடம் இருந்து வாங்கியது ஏன் என்பது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கி, போட்டி முடிந்த பின்னர் அந்த பந்தின் தன்மை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகதான் என்றும்  பந்துவீச்சு பயிற்சியாளரிடம் அந்த பந்தை காண்பிக்கவே அவர் வாங்கியதாகவும், இதில் வேறு எந்த அர்த்தமும் இல்லை என்றும், தோனி ஓய்வு பெற போவதாக கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்றும் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.