வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:40 IST)

ஐபிஎல் தொடரில் மோசமாக சொதப்பிய 5 வீரர்கள் – சேவாக்கின் பட்டியல்!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய ஐந்து வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பட்டியலிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்குப் பின்னரும் viru ki baithak என்ற நிகழ்ச்சியில் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் அலசல் விமர்சனம் செய்துவருகிறார். தனது வழக்கமான கேலியால் இவர் செய்யும் விமர்சனங்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இப்போது ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய ஐந்து வீரர்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அந்த வீரர்கள்
  1. ஆரோன் பின்ச்( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  2. டேல் ஸ்டெயின்(ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  3. ஆண்ட்ரு ரஸ்ஸல்(கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  4. ஷேன் வாட்சன்(சென்னை சூப்பர் கிங்ஸ்)
  5. க்ளன் மேக்ஸ்வெல்(கிங்ஸ் லெவன் பஞ்சாப்)