வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:00 IST)

தீபாவளியை ஒட்டி அதிகமான விமான டிக்கெட் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

தீபாவளியை ஒட்டி விமானப் பயண டிக்கெட்கள் இரு மடங்கு வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை காரணமாக வெளியூர்கள் மற்றும் மாநிலங்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் முனைப்பில் உள்ளனர். இதனால் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் கூட்டம் அதிகமாக சிறப்பு பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கான பயண டிக்கெட்களின் விலை இருமடங்காகியுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.