வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:10 IST)

ஒட்டுமொத்த ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐபிஎல் அணிகள்!

ஐபிஎல் போட்டியில் வீரர்களை ஏலம் எடுப்பது ஒவ்வொரு வருடமும் இருந்தாலும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒட்டுமொத்தமாக அணியை மாற்றும் ஏலம் விடப்படும் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒட்டுமொத்த ஏலம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு புதிய அணி ஒன்று இணைய இருப்பதால் மீண்டும் ஒட்டுமொத்த ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஆனால் இதற்கு ஒரு சில அணிகள் குறிப்பாக இரண்டு முக்கிய அணிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே தங்கள் அணியி உள்ள வீரர்கள் நன்றாக செட் ஆகி விட்டதால் அந்த வீரர்களை தாங்கள் இழக்க விரும்பவில்லை என்றும் அதனால் ஒட்டுமொத்த ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி வருகின்றனர். குறிப்பாக மும்பை அணி தங்கள் அணியில் உள்ள எந்த வீரரையும் இழக்கத் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும், அகமதாபாத் என்ற புதிய அணி வரவிருக்கும் வீர்ர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்