செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:28 IST)

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டி… வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி இன்று நடக்க உள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் போட்டித் தொடர் நியுசிலாந்து நாட்டில் நடக்க உள்ளது. இதில் முதல் டி 20 போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி நடக்க உள்ளது.

இந்த தொடரில் கோலி, கே எல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டதை அடுத்து ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இந்திய அணிக்கு எதிர்காலத்தில் ஹர்திக் பாண்ட்யாவைக் கேப்டனாக நியமிக்கவேண்டும் என சொல்லப்படும் நிலையில், அவரின் திறமைக்கு ஒரு சோதனையாகவே இந்த தொடர் அமைய உள்ளது.