1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sanju Samson talked about the competition he facing india team

கேரளாவில் இருந்து இந்திய அணிக்காக ஆடுவதென்பது… மனவலியைக் கொட்டிய சஞ்சு சாம்சன்!

சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

9 ஆண்டுகளில் அவர் இதுவரை 16 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 25 டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டனாக விளையாடி வரும் நிலையில் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாதது குறித்து பேசியுள்ளார்.

அதில் “உலகின் மிகச்சிறந்த அணிக்காக நீங்கள் விளையாட வேண்டும் என்றால் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். கேரளாவில் இருந்து வந்து ஒரு இளைஞன் இந்திய அணிக்காக ஆடவேண்டுமென்றால் அவரின் ஸ்பெஷலாக எதாவது இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள மொமண்ட்... ஹர்திக்கை கட்டியணைத்த ரோஹித் ஷர்மா!