திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (17:45 IST)

எனது கனவு இதுதான் - விராட் கோலி ஓபன் டாக்

Virat Kohli
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
 
இதற்காக, சென்னை கிங்ச், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 
நட்ப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை அணியுடன் பெங்களூரு அணி மோதவுள்ளது.
 
கடந்த 16 சீசன்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரில் விளையாடிய ஆர்.சி;பி அணி இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு என்ற பெயரில் விளையாடவுள்ளது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு கர்நாடக அரசு அதன் தலைநகரை பெங்களூரு என்று பெயர்  மாற்றியது. எனவே ஆர்.சி.பி அணியும் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி இப்பெயரை மாற்றியுள்ளது. அதேபோல், ஜெர்சியை நீலம் மற்றும் சிவப்பு கலரில் மாற்றியுள்ளது.
 
இந்த   நிலையில்,  ஐபிஎல் கோப்பையை வெல்வது எப்படி இருக்கும் என்பதை உணர வேண்டும் என்பது எனது கனவு. இந்த வருடம் கோப்பையை வென்று அதனை இரட்டிப்பாக்குவோம் என்று ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில்  நடைபெற்ற  மகளிர் ஐபிஎல் தொடரில்  டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில்   ஆர்.சி.பி அணி வென்று சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.