1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (18:02 IST)

பாக்., வெற்றியைக் கொண்டாடியதாக 17 பேர் கைது விவகாரம்- நீதிமன்றம் அதிரடி

கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.
 
இதைக் கொண்டாடியதாக மத்திய பிரதேசம் மாநிலம் மொஹட் என்ற கிராமத்தில் 17 இஸ்லாமியர்கள், 2 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
 
இந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது.
 
இந்த வழக்கில் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு, கைது, சிறை, போலீஸாரின் தாக்குதல், தேசத்துரோகிகள் என்று பழி சுமத்தப்பட்டனர்.
 
இந்த வழக்கில் இருந்து அவர்கள் விடுதலை ஆக 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. 17 பேரில் 2 குழந்தைகளுக்கு அப்பாவான ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் போட்டியை யாரும் அந்த கிராமத்தில் டிவியில் கூட பார்ப்பதில்லை என்று அந்தக் கிராமத்தில் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதுகுறித்து புகாரளித்த இந்து மதத்தைச் சேர்ந்தவரும், அரசு சாட்சியும் காவலர்களின் அழுத்தத்தால் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.