1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sanju Samson DRS to wide ball

இதுக்கெல்லாம் DRS-ஆ… ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய சஞ்சு சாம்ஸன்!

சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் கேட்ட டி ஆர் ஆஸ் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடுவர்களின் விக்கெட் முதலான முடிவுகளுக்கு எதிராக அப்பீல் செய்ய பேட்டிங் மற்றும் பவுலிங் அணிகளுக்கு டி ஆர் எஸ் எனப்படும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் வீரர்களும் அணிகளும் நன்மைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் வைட் பாலுக்கு ரிவ்யூ கேட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதுவரை விக்கெட்கள் மற்றும் நோ பால் போன்றவற்றுக்கு மட்டுமே இதுபோல ரிவ்யூக்கள் கேட்கப்படும். இந்நிலையில் சாம்சனின் செயல் அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஐ.பி.எல். பிளே ஆப், இறுதிப்போட்டி நடப்பது எங்கே: பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு