1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (12:21 IST)

இந்திய U19 அணியில் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் டிராவிட் தேர்வு!

இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடிய ராகுல் டிராவிட் எந்தவொரு கோப்பையையும் வெல்லாமல் ஓய்வு பெற்றார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக தன்னுடைய பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டுதானிருந்தார். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியைக் கோப்பை வெல்லவைத்தார்.

அதன்பிறகு இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆனார். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். இதையடுத்து அவர் எதாவது ஒரு ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் டிராவிட் உள்ளூர் போட்டிகளில் விளையாடி கவனம் ஈர்த்து வருகிறார். டிராவிட் போல நிதானமாக ஆடாமல் அதிரடி வீரராக உருவாகி வருகிறார் சமீத். இந்நிலையில் தற்போது அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ளார். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய U19 அணியில் சமீத்தும் இணைந்துள்ளார்.