1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kuldeep yadav talked about playing in pakistan

பாகிஸ்தான் சென்று விளையாட ஆர்வமாக இருக்கிறேன்… இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து!

இந்தியா
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை ஏற்க மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இன்னும் குழப்பமான சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார். அதில் “நான் இதுவரை பாகிஸ்தான் சென்று விளையாடியதில்லை. ஒரு வீரராக என்னை எங்கு அனுப்பினாலும், நான் விளையாட தயாராக இருக்கிறேன். பாகிஸ்தான் ரசிகர்கள் மிகச்சிறந்தவர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பாகிஸ்தான் சென்று விளையாட ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஹர்திக் நடாஷா உறவு முறிவிற்கு என்ன காரணம்?... குடும்ப நண்பர் பகிர்ந்த தகவல்!