ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 12 நவம்பர் 2022 (09:59 IST)

ரோஹித் ஷர்மா வீரர்களுக்கு நல்ல முன்னுதாரணம் இல்லை… பாகிஸ்தான் வீரர் கருத்து!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை என சல்மான் பட் கூறியுள்ளார்.

இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசும்போது “ரோஹித் ஷர்மா சிறந்த வீரர்தான். ஆனால் அவர் பிட்னெஸ் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. அவர் இப்படி இருக்கையில் வீரர்கள் அவர் முதுகுக்கு பின்னால் விவாதிக்கும் நிலையை உருவாக்குகிறார். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் பிட்னெஸ்ஸோடு இருந்தார்கள். அவர்களால் சிக்ஸர்களும் அடிக்க முடியும். விக்கெட்களுக்கு இடையில் விரைவாக ஓடி ரன்களும் சேர்க்க முடியும்” எனக் கூறியுள்ளார்.