1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2023 (16:00 IST)

பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணிக்கு காவி ஜெர்சியா? – பிசிசிஐ விளக்கம்!

Saffron Jersey
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி காவி ஜெர்சி அணிவதாக வெளியான செய்தி குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.



உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையே சென்னையில் பயிற்சி ஆட்டத்தின் போது காவி நிற ஜெர்சியில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணி காவி ஜெர்சி அணிந்து விளையாட உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்த தகவல் குறித்து பிசிசிஐ கௌரவ பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் பேசியபோது, 14ம் தேதி நடைபெற உள்ள பாகிஸ்தான் – இந்தியா உலக கோப்பை போட்டியில் இந்திய அணி காவி ஜெர்சியில் விளையாட உள்ளதாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், முற்றிலும் ஆதாரமற்ற இது யாரோ ஒருவரின் கற்பனை என்றும் தெரிவித்துள்ளார்.