வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:49 IST)

இந்த இரண்டு ஆஸி வீரர்கள்தான் ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள்… அஸ்வின் கணிப்பு!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் இன்று இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் 77 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். ஆனால் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் கலக்கிய வீரர்கள் இந்த ஏலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இந்த ஏலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி வீரர் அஸ்வின் தன்னுடைய யுட்யூப் சேனலில் இந்த் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 14 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் எனக் கணித்துள்ளார். இந்திய வீரர் ஷாருக் கான் 10 கோடி ரூபாய்க்கு மேல் எடுக்கப்படுவார் என்றும் உலகக் கோப்பை இளம் ஹீரோ ரச்சின் ரவீந்தரா 4 கோடி ரூபாய்க்கு எடுக்கப்படுவார் எனவும் கணித்துள்ளார்.